நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி பலி : திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 12:37 pm

திருப்பூர் : காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் பனப்பாளையம் அருகே பூஜா (19) என்ற இளம்பெண் தலையில் காயங்களுடன் உடலில் உடையில்லாமல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சாலையோரம் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் லோகேஷ் தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என சிகிச்சையில் இருந்த லோகேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து காதலன் லோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 936

    0

    0