பிரேக் பிடிக்காமல் ஸ்வீட் கடைக்குள் புகுந்த அரசு பேருந்து.. உயிர் தப்பிய பெண் : திக் திக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 4:45 pm

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக சுப்ரமணி என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்க முயன்று வெளியே வந்த போது பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த ஸ்வீட் கடையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.

இதனால் கடைக்குள் இருந்த பெண் காயம் அடைந்து அருகில் இருந்தவரின் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் ஸ்வீட்டுகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அரசு பேருந்தை பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து பழனியில் சக்கரம் கழண்டு ஓடியது இதனால் பயணிகளின் உயிர் நூலிழையில் தப்பியது.

அதேபோன்று தற்போது அரசு பேருந்து பழுதடைந்து பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 338

    0

    0