அதிவேகத்தில் திரும்பிய அரசுப் பேருந்து.. சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த பள்ளி ஆசிரியை!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 7:14 pm

அதிவேகத்தில் திரும்பிய அரசுப் பேருந்து.. சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த பள்ளி ஆசிரியை!

திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ளது காமராஜர் பேருந்து நிலையம் இப்ப பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான உள்ளூர் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன அதேபோல் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்

இந்நிலையில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி மீரா (35). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் புறநகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மீரா பேருந்து நிலையத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வடமதுரையில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த டவுன் பஸ் மோதியதில்
முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர் வடக்கு காவல் துறையினர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

பேருந்து நிலையத்தில் அரசு அரசு பேருந்து மோதி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!