டப்பா டான்ஸ் ஆடும் அரசு பேருந்து -தினந்தோறும் திக் திக் பயணத்தில் அச்சத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்..!

Author: Vignesh
24 August 2024, 3:42 pm

பின்பக்கம் முழுவதும் கண்ணாடி இல்லாமல் அரசு பேருந்து சென்றது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பின்பக்கம் கண்ணாடி இல்லாமல் சென்றது பயணிகள் இடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்காமலும் பல பேருந்துகள் ஓடிக் கொண்டிருப்பதால் உடனடியாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் சென்ற அரசு பஸ் முழுவதும் கண்ணாடி இல்லாமல் பல மாதங்களாக ஓடிக்கொண்டிருப்பதால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!