திருப்பூர் : நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.
நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் திருப்பூர் தொழில்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.363-க்கும், 24-ம் நம்பர் ரூ.375-க்கும், 30-ம் நம்பர் ரூ.385-க்கும், 34-ம் நம்பர் ரூ.405-க்கும், 40-ம் நம்பர் ரூ.425-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.355-க்கும், 24-ம் நம்பர் 365-க்கும், 30-ம் நம்பர் ரூ.375-க்கும், 34-ம் நம்பர் 395-க்கும், 40-ம் நம்பர் ரூ.415-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.