செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் முடிவை ஆளுநர் வாபஸ் பெறவில்லை.. அடுத்த கட்ட நடவடிக்கையே இதுதான் : அண்ணாமலை பரபர!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 4:54 pm

கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அமைச்சரை நீக்க உரிமை இருக்கா?? என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எப்படி எதிர்க்கிறார் என தெரியவில்லை.. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படி ஆளுனர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுனர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு. பாஜக வேறு.. ஆனால் கடிதத்தை படிக்கும் போது என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.

கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சிவாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. இதை அரசு சரி செய்ய வேண்டும்.

செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவு. அமலாக்கத்துறை விசாரிக்க விடமால் அரசு உதவுகிறது. சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது.

தீக்சிதர் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுபடுத்த நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீறி அரசங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே பேராட தயங்கமாட்டேன்.

ஜீலை 28ம் தேதி ராமேஸ்வரம் நடைபயணத்தை தொடங்கவுள்ளேன். அமித்சா தொடங்கி வைக்கவுள்ளார்.நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன்.யாரும் வேண்டுமானால் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் வந்தால் வரட்டும்.

படத்தில் புகைபிடிப்பதால் இளைஞர்கள் , குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஆனால் மத்திய அரசின் விதி முறைகளை பின்பற்றி படத்தை வெளியிட வேண்டும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 343

    0

    0