கார் வெடிப்பு குறித்து ஆளுநர் தேவையில்லாமல் பேசுகிறார்.. எதையும் மறைக்கவில்லை.. பொங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 9:53 pm

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுனர் கோவை குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக தேவையில்லமல் பேசி வருகின்றார்.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடரான என் ஐ ஏ விசாரணை-யானது நான்கு நாட்களுக்கு பிறகு-தான் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மாநில காவல்துறை இந்த சம்பவம் நடைபெற்ற உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அதைபோல் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் நேரில் சென்றனர்.

சம்பவத்தில் தொடர்புடையவர் உடனே அடையாளம் காணப்பட்டார். அதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறை மத்திய காவல்துறை-யினருடன் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து உள்ளது.

பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைபு விவகாரத்தில் கூட மத்திய புழனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து சரியாக செயல்பட்டது தமிழக காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே மாநில காவல்துறை எந்த விவகாரங்களிலும் தோய்வில்லாமல் சிறப்பாக எல்லா விசயங்களிலும் செயல்பட்டு வருகின்றது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கினை பொறுத்தவரையில் என் ஐ ஏ முழுமையாக விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து வருகின்றது.
ஜெனிசா முபின் ஏற்கனவே என் ஐ ஏ-வால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகையில் கூட தமிழகம் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்தது. கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தினை பொறுத்தவரையில் எல்லா விசாரணைகளுக்கும் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து அனைத்து விசாரணை ஆவணங்களையும் என் ஐ ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருந்து நாட்டை காப்பாற்றுவதில் முழு திறமை படைத்தவர் தமிழக முதல்வர். தமிழகத்தில் தீவிரவாத செயல்பாடுகளுக்கு ஒரு போதும் தமிழக முதல்வர் இடம் கொடுக்கமாட்டார்.

கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் எந்தவித ஆதாரங்களையும் தமிழக அரசு அளிக்கவில்லை. ஆனால் தமிழக ஆளுனர் கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் தேவையில்லாமல் பேசி. வருகின்றார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது அந்த விவகாரங்களில் தாமதமாக சென்று விசாரணை மேற்கொள்ளும் என் ஐ ஏ தமிழகத்தில் கோவை-யில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மட்டும் நான்கே நாட்களில் வந்து விசாரணை-யை தொடங்கி உள்ளது என தமிழக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 394

    0

    0