“The Gray Man” படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Author: Rajesh15 July 2022, 5:32 pm
தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. ஹாலிவுட் திரையுலகின் டாப் நடிகர்களுடன் அவர் நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் அப்படத்தில் தனுஷ் முக்கிய நட்சத்திரங்களுடன் அவர் சண்டையிடும் காட்சியின் வீடியோ வெளியாகியிருந்தது. அதில் தனுஷ் அக்ஷனை கண்ட ரசிகர்கள் படத்தை பார்க்க அர்வமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது The Gray Man தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காக தனுஷ் $ 500,000 சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் அப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த Chris Evans $ 15 million மற்றும் Ryan Gosling $ 10 million சம்பளமாக பெற்றுள்ளனர்.