வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
கோவை மருதமலை சாலை நவாவூர் அருகே சரஸ்வதி மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் பாலாஜி (வயது 42). கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மளிகைக்கடைக்கு எதிரே உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் கோகுல்ராஜ் என்ற இளைஞர் வந்து பிஸ்கட் வாங்கி சென்று உள்ளார்.
சிறிது நேரத்தில் கோகுல்ராஜ் பெயரை சொல்லி கடைக்கு வந்த நபர் பணத்தை சில்லறை கொடுக்கும் பொழுது தவற விட்டு சென்றதாக கூறி பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.
உன்னை எனக்கு தெரியாது நீ சென்று கோகுல்ராஜை வரச்சொல் என்று கூறி அனுப்பி உள்ளார். மேலும் கடையில் தேடி பார்த்த பொழுது கோகுல்ராஜ் தவற விட்ட பணம் 6 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர் வேலை செய்யும் நிறுவன உரிமையாளருக்கு பணத்தை விட்டு சென்ற கோகுல்ராஜ் பற்றி கூறி பொறுப்புடன் இருக்க சொல்லும்படி கூறியுள்ளார் பாலாஜி.
இது குறித்து கோகுல்ராஜ் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுல்ராஜை அழைத்து கண்டித்து உள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர் தன் நண்பரை அழைத்துக்கொண்டு மளிகைக்கடைக்குள் புகுந்து பாலாஜியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர்.
தற்போது மிளிகைக்கடைக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் கடைகாகாரரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.