தப்பு செய்தவர் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் : எ.வ. வேலு ரெய்டு குறித்து உளறிய திமுக அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 6:21 pm

தப்பு செய்தவர் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் : எ.வ வேலு ரெய்டு குறித்து திமுக அமைச்சரின் பகீர் கருத்து!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கயல்விழி பேட்டி அளித்த போது அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்து கேட்டபோது, தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் தீர வேண்டும், மக்களுடைய பணத்தை தவறாக பயன்படுத்தினால் எந்த அரசாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 166 பேருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்புக்கான பணி ஆணை வழங்கி உள்ளது, இதேபோன்று தமிழக ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு உணவு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை குறித்து அமைச்சர் கயல்விழி பதிலளிக்கும் போது அவர் திமுக கட்சியைச் சார்ந்த அமைச்சர் என்பதை மறந்து பேட்டி அளித்ததால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1210

    0

    0