அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 7:21 pm

அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட எல்லை அருகே கரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் கழுத்து மற்றும் உடலில் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த எவரேனும் காணாமல் போய் உள்ளனரா என அந்த மாவட்ட போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்டு, வெட்டுக்காயங்களுடன் இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியில் எரிக்கப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கதுகுறிப்பிடத்தக்கது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 406

    0

    0