அரசுப் பள்ளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்… உள்ளே இருந்த பிரபலம் : விசாரணையில் ஷாக் தகவல்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 1:04 pm

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள உகினியம் அரசு உயர்நிலை பள்ளியில் திடீரென தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் ஊனியம் கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று இறக்கப்பட்டதாக தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

வி.டி.ஆர்.பி.ஓ என்ற பெயர் கொண்ட அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அதில் முக்கிய பிரமுகரான வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டி வந்த பைலட் அவருடன் சேர்ந்து 3 பேர் பயணம் செய்ததாகவும், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்க முடியாமல் திடீரென அப்பகுதியில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த முக்கிய பிரமுகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவருடன் பயணித்த மூன்று பேர் வானிலை சீரானவுடன் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பூர் புறப்பட்டுள்ளனர்.

திடீரென மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் இறங்கிய ஹெலிகாப்டர் கண்டு அப்பகுதி பொதுமக்கள் கூடியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ