இளைஞர்களின் நாயகன்… காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர் : வருத்தம் தெரிவித்த அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 3:54 pm

கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று விஜயகுமார் காவல்துறை பணியில் சேர்ந்தார். இதனையடுத்து, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு கோவையில் உள்ள முகாம் அலுவகம் வந்தவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த துடிப்பான இளம் அதிகாரி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

விஜயகுமார் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமது சிறப்பான செயல்களால் முத்திரைப் பதித்தவர். காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர்.

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு இ.கா.ப தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர்.

காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்களின் நாயகனாக விளங்கியவர். காவல் அதிகாரி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?