அதிவேகமாக வந்த பைக்… பேக்கரிக்குள் நுழைந்து கோர விபத்து : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 2:49 pm

அதிவேகமாக வந்த பைக்… பேக்கரிக்குள் நுழைந்து கோர விபத்து : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி இவர் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் அறிவொளி நகரைச்சேர்ந்த பர்கத்துல்லா
என்பவர் வ இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதி கொண்டதில் கட்டுபாட்டை இழந்த முகமது அலியின் இரு சக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த பேக்கரிக்குள் அசுர வேகத்தில் புகுந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த முகமது அலியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பர்கத்துல்லாவுக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் முகமது அலி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த பேக்கரியில் டேபிள்களை இடித்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேக்கரியின் உரிமையாளர் நூலிழையில் உயிர்த்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!