கரூரில் இறுகும் வருமான வரித்துறையினரின் பிடி… அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு சிக்கல்?!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 6:09 pm

மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசோக் குமார் புதிதாக கட்டி வரும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் நோட்டீசை ஒட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக் குமார் வீட்டில் இன்று காலை நோட்டீஸ் ஒட்டிய நிலையில், தற்போது மீண்டும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று காலை கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்பட்டது.

இதுபோன்று, அவரது சகோதரர் அசோக் குமார் அலுவலகத்தில் 10 மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

மின்துறை மற்றும் டாஸ்மாக் ஒப்பதாரர்களின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26 ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!