பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கோவை அருகே பயங்கரம்!!
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கணபதியப்பன் பாப்பா மற்றும் மகள் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார்கள். கணபதியப்பன், அவரது மகள் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றனர்.
அப்போது வீட்டில் மூதாட்டி பாப்பா மட்டும் தனியாக இருந்தார். மூதாட்டி கொலை இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கணபதியப்பன், அவரது மகள் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது வீட்டில் தலையில் தாக்கப்பட்டு நிலையில் பாப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரின் உதவியுடன் இதுகுறித்து உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அடுத்து கொன்றது தெரியவந்தது.
ஆனால் மூதாட்டி பாப்பா அணிந்து இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்?, எதற்காக பாப்பாவை கொலை செய்தார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பிணமாக கடந்த மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
This website uses cookies.