மனைவியை கொலை செய்து சடலத்தை வீட்டில் பூட்டி வைத்து எஸ்கேப் ஆன கணவன் : ஆந்திராவில் தேடிய தமிழக போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 10:07 pm

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடி ஊராட்சி சாய் நகரில் வாடகை வீட்டில் வசித்த வௌிமாநில லாட்டரி டிக்கெட் புரோக்கர் நரசிம்மராஜ் (வயது 37) தனது சொந்த வீட்டை விற்று அதில் கிடைத்த 28 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு செலவு செய்து வந்துள்ளார்.
இதனை அவரின் மனைவி சிவரஞ்சனி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்து, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தனது தாய் வசந்தகுமாரி மற்றும்  2 குழந்தைகளுடன் ஆந்திராவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆந்திர பகுதியில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படையினர் ஆந்திராவில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிணத்தை மறைத்து வைத்த தனது வீட்டின் நிலை என்ன என்பது குறித்து தொிந்து கொள்ள நோட்டமிடுவதற்காக சாய் நகருக்கு நரசிம்மராஜ் தனது தாயுடன் வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?