2வது மனைவி வீட்டுக்கு சென்ற கணவன்.. கதவை திறந்து பார்த்ததும் ஷாக்.. சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த சலீம்!
Author: Udayachandran RadhaKrishnan9 May 2024, 1:59 pm
2வது மனைவி வீட்டுக்கு சென்ற கணவன்.. கதவை திறந்து பார்த்ததும் ஷாக்.. சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த சலீம்!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) என்று 2 மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவதாக முதல் மனைவியே கார்த்திகாமணி பார்த்து தன் கணவர் சரவணனுக்கு செல்வியை மணம் முடித்து வைத்துள்ளார்.
சரவணனுக்கும் செல்விக்கும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவியை அவுட்டர் பகுதியில் குடிவைத்தும் , 2வது மனைவி செல்வியை பெரிய கடை வீதி அருகே சுங்கச்சாவடி தெருவில் காஜா பட்டன் தைக்கும் கடை வைத்துக் கொடுத்து அந்த வீட்டிலேயே குடி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று(08.05.2024) மதியம் சாப்பிடுவதற்கு முதல் மனைவி கார்த்திகா மணியிடம் வருவதாக கூறிவிட்டு 2வது மனைவி செல்வி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
கணவர் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் முதல் மனைவி போனில் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே நேராக சுங்கச்சாவடி வீட்டுக்கு கணவனை பார்க்க வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது.
உடன் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு சரவணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சரவணன் 2வது மனைவி செல்வி சுங்கச்சாவடி வீட்டில் இல்லாதை அறிந்த போலீசார் செல்வியை நத்தத்தில் உள்ள அவர் பெற்றோர் வீட்டில் இருந்தவரை பிடித்து வந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் வீட்டின் அருகே டீக்கடை நடத்தி வரும் சலீம் என்பவருக்கும் செல்விக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் சலீமும் செல்வியும் சேர்ந்து சரவணனை கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து செல்வி மற்றும் சலீமை பிடித்து நத்தம் காவல் துறையினர் நத்தம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது , சரவணன்தனது மனைவிக்கு காஜா கடை வைத்துக் கொடுத்துள்ளார்.
அக்கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடையின் அருகே டீக்கடை வைத்துள்ள சலீம் தினந்தோறும் டீ கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். அப்போது சலீம் செல்விக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சம்பவத்தன்று முதல் மனைவி வீட்டுக்கு சாப்பிட செல்லும் வழக்கமுடைய கணவன், அன்று 2வது மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் சரவணனுக்கு விஷயமே புரிந்தது.
மனைவிக்கும், டீக்கடை சலீமுக்கும் தகாத உறவு இருந்ததை அறிந்து கண்டித்துள்ளார். கணவனுக்கு தெரிந்துவிட்டதே என பயந்த செல்வி, சலீமுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு அரங்கேறியுள்ளனர்.
செல்வி மற்றும் சலீம் இருவரும் சேர்ந்து சரவணன் கழுத்தை வேஷ்டி மற்றும் துண்டால் நெருங்கி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் சலீமிற்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டு அவரது அம்மாவின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணியாற்றிய மதுரையை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்துள்ளார். ஆனாதல் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்
மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில்நடைபெற்ற இச்சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது