கையில் குழந்தையுடன் நின்றிருந்த மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் : சுருண்டு விழுந்த பெண்.. நடந்த ட்விஸ்ட்!!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 5:09 pm
பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த கணவன் மனைவியை தாக்கியதால் குடி போதை ஆசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் கணவன் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் தனது மனைவியை தாக்கிக் கொண்டிருப்பதாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனைவியை அடித்துக் கொண்டிருந்த நபரை மீட்டு விசாரித்த பொழுது அந்த நபர் 36 வயது சரவணன் என்பதும் அவரது மனைவி செல்வி என்பதும் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை இருப்பதும் வேடசந்தூர் அருகே லவுகனம்பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
குடி போதைக்கு அடிமையான சரவணன் பணம் கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. உடனே சரவணனை எச்சரித்த போலீசார் செல்வி மற்றும் மூன்று குழந்தைகளை பேருந்தில் ஏறி ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டு சரவணனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரத்தில் பேருந்து நிலையம் முன்பாக நின்றிருந்த செல்வி குழந்தைகளிடம் வந்த சரவணன் திடீரென மனைவியை தாக்க தொடங்கினார்.
இதில் செல்வி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்

குழந்தைகள் கதறி அழுததை பார்த்த போலீசார் குடிபோதை ஆசாமியின் அட்ராசிட்டி தாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் பொது மாத்து கொடுத்து போலீசார் குண்டுகட்டாக தூக்கி ஆம்னி வேனில் ஏத்திச்சென்றதால் பரபரப்பு நிலவியது.