வங்கியில் புகுந்து மனைவியை கண்டம்துண்டமாக வெட்டிய கணவன் : பதை பதைக்கும் வீடியோ காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 6:47 pm

தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தேவாரம் கனரா வங்கியில் நகை அடகு வைக்க சென்றபோது, வங்கிக்குள்ளேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவன் வெள்ளைச்சாமி பிரேமலதாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரேமலதாவுக்கு தேவாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவாரம் காவல்துறையினர் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருவதுடன், தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்ததாகவும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

https://vimeo.com/690938258

அந்த ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்குள் புகுந்து மனைவியை கணவன் வெட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1332

    0

    0