தனியார் கல்லூரியில் நுழைந்த தெருநாயை அடித்தே கொன்ற சம்பவம் : வடமாநில இளைஞர்களை கைது செய்தது காவல்துறை!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 9:18 pm

கோவை சரவணம்பட்டி தனியார் குமரகுரு கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி இருவருடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாயை விரட்டும் படி கல்லூரி தரப்பில் கூறியதாக தெரிகின்றது.

இதை அடுத்து அந்தப் கல்லூரி வளாகத்தில் சுற்றிய நாயை விரட்டியிருக்கின்றனர்.
அப்படி விரட்டப்பட்ட நாய் தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு குழியில் பதுங்கியது.

அதனை குச்சியை வைத்து குத்தி விரட்ட முயன்று இருக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நிலையல் விலங்கியல் ஆர்வகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியிருந்தன.

இதுகுறித்து சரணம்பட்டி காவல் துறையினரிடம் விலங்கியல் ஆர்வலர் ஐஸ்வர்யா தந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரன்ஜில், பாய்டி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 429 – விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் குச்சியால் குத்தி துன்புறுத்தப்பட்ட நாய் பரிதாபமாக உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 526

    0

    0