என்ன பண்ணுனாலும் விட மாட்டோம்… சுவர் ஏறி குதித்து சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 3:54 pm

கரூர் – கோவை ரோட்டில் உள்ள பால விநாயகர் கிரஷர் தங்கராஜ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுவற்றின் மீது ஏறி குதிப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது கரூர் வீடு மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

இந்த சோதனைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும், அவர்களின் வாகனங்களையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கரூர் – கோவை ரோட்டில் உள்ள பால விநாயகர் கிரஷர் தங்கராஜ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுவற்றின் மீது ஏறி குதிப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. பலமுறை காலிங் பெல் அடித்தும் கதவை திறக்காததால், அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததாக சொல்லப்படுகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?