குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 4:09 pm

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா சங்கமம் விடுதி பஞ்சாயத்து உட்பட்ட குறுவாண்டான் தெருவில் இரண்டு சமூகத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு கால் செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள நீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூக மக்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில் இரண்டு சமூகத்து மக்களும் ஊரில் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் எங்களது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக ஒரு சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

நீர் மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவு வந்தவுடன் சாணம் கலந்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களுக்கு இளையராஜா என்பவர் மீது சந்தேகம் உள்ளது.

அவரை காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தான் எங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகின்றனர். என்ன நடந்தது என்று தெரியாமல் இந்த விஷயத்தை பெருசாக்குகின்றனர் இரண்டு சமூகத்து மக்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் அங்குள்ள கோயிலில் இரு தரப்பினரும் வழிபடுகிறோம்.

ஆனால் வேண்டுமென்று ஒரு சிலர் எங்களுக்கு பிரிவினையை உருவாக்கும் முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த பகுதி மக்கள் அரசியல் கட்சி தலைவர்களும் ஊடகங்களும் தான் எங்களை பிரித்து பார்க்கின்றனர் நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை இரு தரப்பினரும் தான் பயன்படுத்துகிறோம் இளையராஜா என்பவர்தான் சாணம் கலந்துள்ளதாக முதல் முதலில் தெரிவித்தார்
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது முடிவு எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 303

    0

    0