உடல் பருமன் சிகிச்சை எடுத்த இளைஞர் பலியான விவகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த ACTION!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 1:38 pm

உடல் பருமன் சிகிச்சை எடுத்த இளைஞர் பலியான விவகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த ACTION!

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

கொழுப்பபை நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்… தோல்வி பயத்தால் இப்படி பேசுகிறார் ; ஆர்பி உதயகுமார்…!!

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 346

    0

    0