திருவாரூர் தேர் வீதிக்கு கலைஞர் சாலை என பெயரா? 2024 நடைபெறும் தேர்தலே திமுகவுக்கு கடைசி : ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 8:18 pm
திருவாரூர் தெற்கு வீதி பெயரினை டாக்டர் கலைஞர் சாலை என மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகராட்சியில்11.4.22 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திருவாரூர் தெற்கு வீதியில் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செயலை தடுத்து நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஆழி தேரோடும் வீதிகள் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் மாநில செயலாளர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் அண்ணாமலை கண்டன உரையாற்றிய போது, எதையாவது
தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் பல பாரதப் பிரதமர் மோடி அவர்கள் திட்டங்களில் அவர் பெயர் எதிலேயும் வைக்கப்படவில்லை.
திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் இலங்கையில் ஏற்பட்ட நிலைமை தமிழகத்திற்கும் வரும். பல கிராமங்களில் மக்கள் தார் சாலைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அங்கே புதிய சாலைகளை அமைத்து கருணாநிதி சாலை என பெயர் வைக்கலாம். மனுநீதி சோழன் ஆண்ட மண். இந்த வீதிக்கு மனுநீதிசோழன் சாலை என பெயர் வைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் முழுவதும் குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளது. 2024 தேர்தலில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குடும்ப அரசியலை ஒழித்து வருகிறார். 2024 தேர்தல் கோபாலபுரத்துக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என பேசினார்.
மேலும் திருவாரூர் தெற்கு வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று வைக்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்படி வைத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செயல்படவிடாமல் மாவட்டம் மாவட்டமாக வந்து போராட்டங்கள் நடத்துவோம் என மாநிலத் தலைவர் அண்ணாமலைப் கண்டன உரையாற்றினார்.