ஒரு பாக்கெட் தானே குடிச்சேன்.. முடியலையே.. விஷ சாராயத்தால் உயிரிழந்த நபரின் கடைசி குமுறல்..!(video)

Author: Vignesh
21 June 2024, 1:34 pm

கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஷச்சாராயத்தை அருந்தி உயிரிழந்த கந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கந்தன் என்பவர் கள்ளச்சாராயமான விஷச்சாராயத்தை அறிந்தி விட்டு வீட்டிற்கு சென்றதும் அவருக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும், விஷ சாராயம் அருந்தி தான் உயிரிழந்ததற்கு கந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் நிலையில், கந்தன் பேசும் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தனுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், இவரின் உழைப்பில் தான் குடும்பம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!