விஜய், அஜித்-க்கு கூட கொடுத்து வைக்கல.. அண்ணாச்சியின் அதிரடியால் ஆடிப்போன திரையுலகம்.! வெளியான தகவல்..!

Author: Rajesh
27 May 2022, 12:48 pm

சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். இவர் தனது கடைகளின் விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க வைக்காமல் இவரே மாடன் உடைகளை அணிந்து விளம்பரங்களில் நடிப்பார். மேலும் இதன் மூலம் அவர் பிரபலமும் ஆனார். கடைகள் மூலம் இல்லாமல் விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர் என்றும் சொல்லலாம்.
இந்த நிலையில் சரவணன் சமீபத்தில் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ‛தி லெஜண்ட்’ என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் அண்மையில் இரண்டாவது பாடலமாக வாடி வாசல் என்ற வீடியோ பாடல் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. கிராமத்து பின்னணியில் திருவிழா மாதிரியான செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடி உள்ளார். இந்த பாடல் தான் தற்போது நெட்டிசன்களுக்கு பேசுபொருளாகியுள்ளது. வாடி வாசல் பாட்டுக்கு சரவணன் ஆடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வியந்துபோயியுள்ளனர்.

இந்த நிலையில், இசை வெளியிட்டு விழா வரும் மே 29 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இசைவெளியிட்டு விழாவில் முன்னணி நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஊர்வசி ரௌடேலா,ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா, ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாதி போன்றோர் பங்கேற்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு கூட இவ்வளவு நடிகைகள் வந்ததில்லை என கமெணட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1054

    10

    4