கொஞ்சம் விட்டிருந்தா வீட்டுக்குள்ள வந்திருக்கும்.. குடியிருப்பு வாசிகளை அலற விட்ட சிறுத்தை.. ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 1:46 pm

கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை வாழை தோட்டம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாலுக்கா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரவு வேளையில் வாழைத்தோட்டம் ஐயப்பன் கோவில் அருகில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?