சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் ; தேனியில் தலைமறைவானவர் 20 நாட்களுக்கு பிறகு கைது..!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 4:36 pm

சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வடவீர நாயக்கன்பட்டி அருகே கடமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி. விவசாயியான இவரது வீட்டில் சிறுத்தை தோலை பதுக்கி வைத்து இருப்பதாக தேனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா உத்தரவின் பேரில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று வனத்துறையினர் துரைபாண்டி வீட்டிற்கு சென்று, சோதனை செய்தனர். மொட்டை மாடியில் காய வைத்திருந்த சிறுத்தை தோலை கைப்பற்றினர்.

தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு சென்னையில் வைத்து கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்லமணி என்பவர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

  • Oviya interview about controversies கல்யாணம் எப்போ? எனக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா..!