போக்கு காட்டிய சிறுத்தை : வனத்துறை வைத்த கூண்டு.. 5 நாட்களுக்கு பின் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!
Author: Udayachandran RadhaKrishnan8 ஜூன் 2024, 2:48 மணி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக காலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர் மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு தேவர் சோலை அருகே உள்ள தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதியில் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது.
மேலும் படிக்க: அண்ணாமலை கண்ட கனவு பலிக்கல.. பாவம் அந்த விரக்தியில் எங்களை பேசறாரு : இபிஎஸ் கடும் தாக்கு!
தகவல் அறிந்த கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் ஏ சி எப் கருப்பையா கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனவர் குமரன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை பிடிபட்ட தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதிக்கு சென்று பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0
0