இதென்னடா கொங்கு மண்டலத்துக்கு வந்த சோதனை : கோவை, திருப்பூரை தொடர்ந்து ஈரோடு மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2022, 11:50 am
ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியான நிலையில் இதுவரை 9 ஆடுகள் 1 கோழி இறந்துள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தனது வீட்டின் பின்புறம் ஆடுகளுக்கு கொட்டகை அமைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கதிர்வேல் அதிகாலை நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்த பொழுது அவர் வளர்த்து வந்த 3 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நம்பியூர் அருகே உள்ள பெருமாநல்லூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் சுற்றி திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
அதனை தொடாந்து நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். அதனால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தி கண்காணிப்பட்டு வருகிறது,
இந்த நிலையில் நம்பியூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோவை, திருப்பூர் பகுதியில் சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் சிறுத்தை புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.