வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 9:48 pm

வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

திருவள்ளூர் மாவட்டம் பரிக்குபட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத வட மாநில நபர் ஒருவர் சிறுமி தனியாக இருந்த வீட்டிற்குள் உள்ளே புகுந்த போது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து தாக்கினர்.

முறையாக அவர் பதில் அளிக்காததால் இதுகுறித்து பொன்னேரி காவல்துறைக்கு தகவல் அளித்து அங்குள்ள கோவிலில் அவரை பூட்டி வைத்து பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கிராமப் பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு வட மாநில நபர் புகுந்து சிறுமியை கடத்த முயற்சி செய்தாரா என அச்சமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர் சற்று மனநலம் பாதித்தவராக உள்ளதாகவும் இந்தி பேசுபவராகவும் உள்ளதால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 194

    0

    0