நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாத்தணும்… என்னை எல்லாரும் வில்லனா பாக்கறாங்க ; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 1:31 pm

நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாத்தணும்… என்னை எல்லாரும் வில்லனா பாக்கறாங்க ; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை!!

கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த மார்ச் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுவிசாரணை செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதுபோன்று, 2001- 2006ம் ஆண்டுகள் காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் மறுவிசாரணை செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த இரண்டு வழக்குகள் மீதான மறுவிசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது, அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 837

    0

    0