இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது..வழக்கை வாபஸ் பெற கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 12:11 pm

கோவை கவுண்டம்பாளையம் அருகே தந்தை இறந்த ஒரு குடும்பத்தில் 46 வயது பெண் கொடுத்த புகாரில் தனது இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கோரி முருகனின் மனைவி பானுப்பிரியா, அவரது தாயார் சின்னம்மாள், மற்றும் தங்கை பழனியம்மாள் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்தப் பெண் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 4 அன்று புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பானுப்பிரியா, சின்னம்மாள், பழனியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் உள்ளூர்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 176

    0

    0