திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் கோழிகள் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இவரது அண்ணன் கார்த்திகேயன். தனது தம்பி அழகேசன் வளர்த்து வந்த மூன்று கோழிகளை அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கூலி வேலை செய்துவந்த பிருத்திவிராஜ் (24) என்பவர் திருடி அரசலூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரிடம் சந்தையில் விற்றதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து கார்த்திகேயன் லாரன்சிடம் சென்று விசாரித்த போது கோழிகளை சந்தையில் வாங்கியதாகவும் பிரித்விராஜியிடம் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதனை கார்த்திகேயன் நம்ப மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 28-ஆம் தேதி அந்த தெரு வழியாக சென்ற பிருத்திவிராஜை அங்கே மறைந்திருந்த கார்த்திகேயன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிருத்திவிராஜன் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பிருத்திவிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு தொட்டிய மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரித்திவிராஜ் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கதிரேசன் வழக்குப்பதிந்து பிருத்திவிராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
இந்நிலையில் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கார்த்திகேயன் மகேந்திர மங்கலத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்று கைது செய்தனார். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
முசிறி அருகே தொட்டியத்தில் கோழி திருடியதாக நினைத்து இளைஞரை கொலை செய்த சம்பவம் தொட்டியம் பகுதியில் பரபரப்பாக உள்ளது. மேலும் இச்சம்வத்தில் வேறு நபர்கள் தொடர்பு உள்ளதா? எனவும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.