குப்பைத் தொட்டியில் துண்டு துண்டாக இருந்த ஆணின் கைகள் : குப்பை அள்ள வந்த தூய்மை பணியாளர்கள் ஷாக்.. விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 1:49 pm

கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தனர்.

அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கோவை மாவட்டகாவல் கண்காளிப்பாளர் பத்திரிநாத், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது.

மேற்கொண்டு விசாரணை செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா என அருகிலுள்ள குப்பைத்தொட்டிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 656

    0

    0