திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கோட்டாட்சியர்?!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 ஆகஸ்ட் 2023, 3:49 மணி
Draupathi amman - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி வருவாய் துறையினர் கடந்த ஜூன் மாதம்,7ஆம் தேதி கோவிலுக்கு சீல் வைத்தனர்.

கோயில் நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என இருசமூக மக்களும் பரஸ்பரம் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பல காட்ட விசாரணையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.


இதனால் விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு தரப்ப்பிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற நிலையில் இன்று 3 ஆம் கட்ட விசாரணைக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டு 9 பேர் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவில், மேல்பாதி கிராமம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்ததால் இன்று நாங்கள் 9 நபர்களும் நேரில் ஆஜரானதாகவும், திரௌபதி அம்மன் கோயில் உள்ளே சென்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த கதிரவன், கந்தன், கற்பகம், கனிமொழி ஆகியோருக்கு இன்றோ அல்லது நாளையோ தீர்வு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துரோபதி அம்மன் கோவிலில் பட்டியல் இன மக்கள் வழிபாடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 293

    0

    0