Categories: தமிழகம்

பிரபல தொழிலதிபரை தாக்க லாரிகளில் வந்த கூலிப்படை : இடத்தகராறால் அரங்கேறிய பயங்கரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. கும்பலுக்கு போலீசார் வலை!!

கோவை கணபதி அலுமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் கணபதி ராமகிருஷ்ணாபுரத்தில் மோட்டார் பம்ப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கார்த்திகேயனுக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது. இதே போல பாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் உள்ள பலரிடமும் தகராறு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பல முறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14 மாதத்திற்கு முன்பு பாலகிருஷ்ணன் செல்வபுரத்தை சேர்ந்த பாட்டில் மூடி வியாபாரம் செய்யும் ராமசந்திரன் என்பவரை கார்த்திகேயனுக்கு சொந்தமான இடத்தில் கம்பெனி வைக்க முயற்சித்த போது தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 2 மணியளவில் பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் இரண்டு லாரிகளில் சுமார் 75 பேரை கூட்டி வந்து கார்த்திகேயனின் குடோன் பூட்டை உடைத்து லாரிகளில் இருந்த ராமசந்திரனின் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

இதை அறிந்த கார்த்திகேயன் அங்கு சென்றார். இதுகுறித்து அவர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில்
பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் அங்கே கீழே இருந்த இரும்பு ராடுகளை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் கார்த்திகேயனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியது. மேலும் அந்த கும்பல் கார்த்திகேயனை ஓட ஓட விரட்டி தாக்க துவங்கினர். அங்கிருந்து விளாங்குறிச்சி சாலைக்கு ரத்த காயங்களுடன் அலறியபடி வந்த கார்த்திகேயனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த கும்பல் தாங்கள் வந்திருந்த லாரி மற்றும் பொருட்களை விட்டு விட்டு தப்பி சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த கார்த்திகேயன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் , ராமசந்திரன் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கார்த்திகேயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குள் நடைபெற்று வரும் மோதல் மற்றும் அடிதடி சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப் படாமல் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

14 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

14 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

15 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

15 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

16 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

16 hours ago

This website uses cookies.