மெய்மறக்க வைக்கும் சாக்லேட்… விற்பனைக்காக வைத்த போது காத்திருந்த அதிர்ச்சி : கோவையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 1:47 pm

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் அன்று (19.05.2023) பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சா சாக்லேட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த லியாகத் அலி மகன் அபுதாகீர் (45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூ.43,000/- மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77,000/- மதிப்புள்ள 77.700 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மூன்று சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 நபர்கள் மீது 238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 483.301 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 177 நபர்கள் மீது 167 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 1925.950 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள்.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 394

    0

    0