ரூ.300 கோடியில் அமைச்சரின் சகோதரர் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா : வருமான வரித்துறை பிடியில் சிக்கியது?!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 8:19 pm

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உறவினர்களால் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீடு, தற்போது வருமானவரித்துறை பிடியில் உள்ளது.

வருமானவரித்துறை அதிகாரி மூன்று கார்களில் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து இருந்து வந்த நிலையில் அவர்களை ஓரமாக நிற்க வைத்து விட்டு சோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் நடைபெற்று வருகிறது. பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய அளவில் பங்களா வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • Parthiban talks about MGR அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!