துர்கா ஸ்டாலினை வரவேற்க சென்ற அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது : முதலமைச்சரின் வருகை ரத்து!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2024, 5:39 pm
புதுக்கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் மாலை திருச்சி வருகிறார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து இரவு மீண்டும் மாநிலத்திற்கு வந்து சென்னை திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வருடன் அவரது மனைவி துர்காஸ்டாலின் வருவதாக கூறப்பட்டது. எனவே அவரை அழைத்துச் செல்வதற்காக கே.என்.நேருவின் பென்ஸ்பென்ஸ் காரை அவரது ஓட்டுனர் சீனிவாசன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தது போது கார் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வேகமாக ஓட்டிச் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்று இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், மற்றும் தனியார் பேருந்து மீது மோதி நின்றது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கண்ட் டோன்மென்ட் காவல் துறையினர் விரைந்து வந்தனர். கிரேன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விபத்தில் கார் ஓட்டுனர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு சிறிய அளவு காயப்பட்டதால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.