இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.. கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது ஏற்பட்ட விபரீதம்..!

Author: Vignesh
30 August 2024, 4:03 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட எம்.பி.எஸ் நகர் பகுதியில் நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே, கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது.

இந்த நிலையில், கழிவுநீர் கால்வாய் அருகே உள்ள பிரவீனா என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. சுவர் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி