அமைச்சருடன் ஆய்வுக்கு சென்ற போது கால் தவறி விழுந்த எம்எல்ஏ.. கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 9:42 pm

அமைச்சருடன் ஆய்வுக்கு சென்ற போது கால் தவறி விழுந்த எம்எல்ஏ.. கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

அண்ணா நகர் பகுதில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் ஆய்விற்கு சென்ற எம்.எல்.ஏ எம்.கே.மோகனுக்கு கால் முறிவு. அண்ணா நக்ர் 3 குறுக்கு தெருவில் உள்ள அம்மா அரங்கத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்திக்க சென்ற போது படிக்கட்டில் தவறி விழுந்தார்.

தவறி விழுந்ததில் எம்.எல்.ஏ மோகனின் வலது காலில் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படகு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!