பணிகளை வேகமாக முடிக்க மாட்டீங்களா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட எம்எல்ஏ!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 5:58 pm

பணிகளை வேகமாக முடிக்க மாட்டீங்களா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட எம்எல்ஏ!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது இதனால் மாணவரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிறுசிறு தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி 46 வது வார்டு இந்திராநகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கனமழையால் அந்த பகுதி குளம்  போல நீர் சூழ்ந்துள்ளது.

அப்பகுதி  பொதுமக்கள் வெளியே வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாத நிலையில் உள்ளதாக புகார்கள் எழுந்த‌ நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் முறையாக வேலை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளை சரமாரியாக சாடி கேள்வி எழுப்பினார்.

விரைவில் மழை நீரை வெளியேற்றி பாதாள சாக்கடையின் அடைப்பை முறையாக சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!