பணிகளை வேகமாக முடிக்க மாட்டீங்களா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட எம்எல்ஏ!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது இதனால் மாணவரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிறுசிறு தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி 46 வது வார்டு இந்திராநகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கனமழையால் அந்த பகுதி குளம் போல நீர் சூழ்ந்துள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் வெளியே வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாத நிலையில் உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் முறையாக வேலை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளை சரமாரியாக சாடி கேள்வி எழுப்பினார்.
விரைவில் மழை நீரை வெளியேற்றி பாதாள சாக்கடையின் அடைப்பை முறையாக சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.