உயிரிழந்த மகன் சேமித்து வைத்த பணம்.. 4 வருடம் கழித்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி : ஆட்சியரிடம் வந்த மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 6:23 pm

உயிரிழந்த மகன் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் 80வயது மூதாட்டி ஆட்சியர் உதவியை நாடியுள்ளார்.

கோவையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த தான் மகன் சேமித்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்து அதனை மாற்றித்தரக் கோரினார்.

கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவரது கணவர் சுந்தர்ராஜ். இவர்களது மகன் செந்தில்குமார். மாரியம்மாளின் கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.

லாரி ஓட்டுநரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.இதனிடையே சமீபத்தில் மாரியம்மாள் தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார்.

அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்தது. அதனைப் பார்த்தபோது அதில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பழைய செல்லாத ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இருந்தன.

இதனிடையே அந்த மூதாட்டி அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என்று மனு அளித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    2