பிறந்து 37 நாட்களே ஆன கைக்குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை… அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…!!
Author: Babu Lakshmanan12 October 2022, 9:28 pm
கரூர் : மன அழுத்த காரணமாக 37 நாள் கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மணவாடி பகுதியில் சேர்ந்த சிவானந்தம் அவரது மனைவி மோகனாம்பாள் (32)இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும், பிறந்த 37 நாட்களில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மோகனாம்பாள் மன அழுத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சந்தேகம் இருந்து உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அருகில் இருந்த கிணற்றில் மேல் பகுதியில் அவர் அணிந்திருந்தது செருப்பு இருந்ததால் அவர் இந்த கிணற்றில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என எண்ணி தீயணைப்பு துறை அறிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது.
கரூர் தீயணைப்பு துறையினர் 12 அடி ஆழ கிணற்றில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்ட போது, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து 37 நாட்களே ஆன கைக்குழந்தையை தவிக்க விட்டுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.