தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த புதுக்கோட்டைசரடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம்- மல்லிகா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், (24) திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே மோத்தகல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை – வாசுகி மகன் வேடியப்பன், என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து ஏழு மாதங்கள் கணவன், மனைவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பின்பு சிந்துவின் மாமியார் வாசுகி, சிந்துவை அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், நீ குழந்தை பெற்றுத்தர தகுதி இல்லாதவள் என்றும், உன்னுடைய உடம்பில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக காரணத்தைக் காட்டி வீட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்து இருக்கிறார்.
இதற்கு காரணம் ஆரம்பத்திலிருந்தே இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்ததாகவும், வாசுகியின் தம்பி மகள் தீபாவை தன் மகன் வேடியப்பனுக்கு திருமணம் செய்தவைக்க ஆசைப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
திருமணம் ஆகி 7 மாதத்திற்கு பிறகு இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வந்ததால் தாய் வீட்டிற்கு வந்த சிந்துவை சில மாதம் கழித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் கணவன் வேடியப்பனோடு வாழ வைத்திருக்கிறார்கள்.
மீண்டும் இதே பிரச்சினை நீடித்ததால் சிந்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் வேடியப்பன் மீது புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததால் சிந்து விஷம் அருந்து அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு வேடியப்பன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த 9 மாதத்திற்கு முன்பு சிந்துவின் கணவர் வேடியப்பனுக்கு இவரது தாய்மாமன் மகள் தீபா, என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த சிந்து காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு மனு கொடுத்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் இன்று அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு பாதிக்கப்பட்ட சிந்து, அவரது தாய் மல்லிகா, தந்தை செல்வம் மற்றும் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். இதேபோல் சிந்துவை ஏமாற்றிய கணவன் வேடியப்பன், இவரது தந்தை ஏழுமலை, நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்திலேயே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தின் வெளியே வந்த சிந்துவின் தாய் மல்லிகா, தன் மகளை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல் சிந்துவின் கணவர் வேடியப்பன் கன்னத்தில் அடித்தார். வேடியப்பனும் பதிலுக்கு மல்லிகாவை அடித்துள்ளார்.
ஆத்திரம் அதிகமானதால் அருகில் இருந்த வேடியப்பனின் தந்தை ஏழுமலையை மல்லிகா, மாறி மாறி அடித்ததால் சாலையில் சென்றவர்கள் கடைகளில் இருந்தவர்கள் கூட்டம் கூறியதால் நீதிமன்ற வளாகத்தின் வெளியே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேடியப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவரது தாய் மாமன் மகள் தீபாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.