குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க கிணற்றில் இறங்கிய தாய் : கனநேரத்தில் நடந்த SHOCK!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 7:32 pm

குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க கிணற்றில் இறங்கிய தாய் : கனநேரத்தில் நடந்த SHOCK!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு மனைவி பவித்ரா (30) குழந்தைகள் ரித்திக் (9), நித்திகா ஸ்ரீ (7) ஆகிய மூன்று பேர் உள்ளனர்.

இவர்கள் மூவரும் வீட்டிற்க்கு அருகே உள்ள கிணற்றில் தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்குவதற்காக தாய் பவித்ரா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தாய் பவித்ரா உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

மேலும் படிக்க: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்?… ஆதரவாளர்கள் தந்த திடீர் ஷாக்!

மேலும் மகள் நித்திகா ஸ்ரீ (7) உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் உடலை ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் மீட்டனர்.

மேலும் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 533

    0

    0