குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்த தாய்.. மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்த கணவன் : காத்திருந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 12:14 pm

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(39). ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகன கோகுல்நாத்(14) மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் மகன் 9ம் வகுப்பு படித்து வந்தார், மகள சாய் நந்தினி(11) 6ம் வகுப்பும் படித்து வந்தார்.

கணவனும் குடி பழக்கத்தினால் அக்கம், பக்கம் கடன் வாங்கி உள்ளார். மனைவி கீர்த்திகா பல சுய உதவி குழுகளில் கடன் வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடன்காரர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ரைஸ்மில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

இன்று அதிகால 3மணி அளவில் வீட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி வந்து பார்த்தார். அப்போது மனைவி, மகன், மகள் ஆகிய மூன்று பேரும் துப்பட்டாவில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதனைக் கண்டு வளர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

இது குறித்து உடனடியாக மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் முதற்கட்டறை விசாரணையில் கடன் தொல்லை காரணமாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிருத்திகா தனது குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: சமூகநீதி பேசும் திமுக.. துணை முதலமைச்சர் பதவியை திருமாவுக்கு தர தயாரா? தமிழிசை நறுக்!

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தூக்கில் போடுவதற்கு முன் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் தூங்கியதும் தூக்கில் தொங்கவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மண்ணச்சநல்லூரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 399

    0

    0